கேரள மாநிலம் மலப்புறத்தில், எடவன்னா எனும் பகுதியில் ரப்பர் பதப்படுத்தும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று சுத்தம் செய்யும் பணியை, மூன்று பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கழிவுகள் சேரும் இடத்தில் உயிரி எரிவாயு உற்பத்திக்கான கலன் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை சுத்தப்படுத்தும் நேரத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக கலனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பணியாளர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தது சுங்கதரயைச் சேர்ந்த ஜாம்சன், உப்படாவைச் சேர்ந்த வினோத், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.