குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரிய கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500 பேர் படுகாயம் அடைந்தனர். 223 பேர் காணாமல் போனார்கள். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கலவரத்தில் சிக்கி பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அப்போது, ரன்திக்பூர் என்ற கிராமத்தில் வைத்து 19 வயதான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பில்கிஸ் பானு நீதிமன்றத்தை நாடினார். பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் ஐந்து காவல் துறையினர் உட்பட ஏழு பேர் குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக ரூ. 50 லட்சமும், அரசு பணியும் இரண்டு வாரங்களுக்குள் வழங்கிட உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணையை விரைந்து முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.