ETV Bharat / bharat

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அதிகாரத்திற்கான புதிய சட்ட புத்தகம்! - இந்தியாவில் கரோனா தொற்று

தேர்தல் நடத்த இது சரியான நேரம் அல்ல என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கருதுகின்றன. கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்படும் வரை தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அவை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன. எனினும், பொருத்தமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டிவருகிறது.

Bihar's new rule book for this year's 'Game of Thrones'

author img

By

Published : Aug 28, 2020, 3:12 PM IST

சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிக்கு மட்டுமல்ல, தேர்தல்களில் தங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய அராஜக கும்பல்களைக் கொண்டிருப்பதிலும் பெயர் பெற்ற மாநிலம் பிகார்.

தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் ஒரு சோதனைக் காலம் வந்திருக்கிறது. நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையத்துக்கு உள்ள திறன், பிகாரில் நிச்சயம் சோதனைக்கு உள்ளாகும். அதோடு, கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உள்ளதால், தேர்தல் ஆணையத்திற்கான சவால் அதிகமாக இருக்கும்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த மாநிலத்தில் 7.2 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

பிகாரில் இதுவரை 17 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல் நடத்த இது சரியான நேரம் அல்ல என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கருதுகின்றன. கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்படும் வரை தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அவை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

எனினும், பொருத்தமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டிவருகிறது.

வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்

தேர்தல் முன்னேற்பாட்டிற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டதை அடுத்து, ஐந்து கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. அதோடு, கரோனா தொற்று அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய கறாரான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பையும் (Rule book) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கலின்போதும், பல்வேறு வகையான பரப்புரைகளின்போதும் தனி நபர் இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேபோல், வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு புத்தகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்படும் வாக்குச்சாவடிகள்

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ஒரு லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், அவை வெற்றி பெற வேண்டுமானால் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள தேர்தல்கள்

கரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ள போதிலும், 34 நாடுகளில் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் கரோனாவால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 220 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்தும் அந்த நாட்டில் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இலங்கையும் சமீபத்தில் பொதுத் தேர்தலை சுமூகமாக நடத்தி முடித்திருக்கிறது.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டு கிளர்ச்சி போன்ற அச்சுறுத்தல் காலங்களில் மட்டுமே – அத்தகைய விதிவிலக்கான சூழலில் மட்டுமே - தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்றும், மற்ற காலங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்றும் அரசியல் சாசனம் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, கரோனா வைரஸ் அச்சுறுத்தலை தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணமாக கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.

அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள்

ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும், மின்னணு வாக்குப் பதிவுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும், மிகப் பெரிய பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும், தேர்தல் பரப்புரை செலவு உச்சவரம்பை உயர்த்த வேண்டும், தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான செலவை வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்ப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்திருக்கின்றன.

டிஜிட்டல் பரப்புரை

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையவழி பரப்புரையை பாஜக முடிக்கிவிட்டிருக்கிறது. எனினும், பிகாரில் 36 விழுக்காடு பேரிடம் மட்டுமே இணைய வசதி இருக்கிறது. 24 சதவீதம் பேரிடம் மட்டுமே ஸ்மார்ட்போன் இருக்கிறது. இது பாஜகவுக்கு சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் மக்களை திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த கட்டுப்பாடுகளால், இந்த பகுதிகளில் தனது பரப்புரையை தீவிரப்படுத்த முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் பரப்புரைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இணையவழியிலும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் மிகப் பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் திறனும் பாஜகவுக்கே அதிகம் என்பதால், இது அக்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இது எதிர்க்கட்சிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல் துறையினர் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில், அதிரடி திருப்பமாக தேர்தல் எத்தகைய கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட இருக்கிறது என்பதை உள்ளடக்கிய புதிய வழிகாட்டு நெறிமுறை புத்தகம்(New Rule Book) வெளியாக இருக்கிறது. பிகாரின் முதலமைச்சர் சிம்மாசனம் யாருக்கு என்பது அப்போது தெளிவாகக்கூடும்.

இதையும் படிங்க: ”காங்கிரஸ் பிராமணர்களை நோக்கிச் செல்வது அரசியலுக்காக அல்ல” - ஜிதின் பிரசாதா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.