ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலில் ஆர்.ஜே.டி முதலிடம்! - ராஷ்ட்ரீய ஜனதா தளம்

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் குற்றப் பிண்ணனி கொண்டவர்களுக்கு சீட் வழங்கியதில் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி முதலிடத்திலும், பாஜக இடண்டாம் இடத்திலும் உள்ளன.

RJD tops in criminal candidates Bihar polls 2020 BJP bags second position in Criminal candidatews பிகார் சட்டப்பேரவை தேர்தல் குற்றப் பிண்ணனி வேட்பாளர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பாரதிய ஜனதா

author img

By

Published : Oct 21, 2020, 5:21 PM IST

பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தல் (2020) மூன்று கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வருகிற 28ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது குற்றப் பிண்ணனி கொண்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 1064 வேட்பாளர்களில் 328 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை (ஆர்.ஜே.டி) சேர்ந்தவர்கள்.

இதற்கு அடுத்த இடத்தில் பாஜக உள்ளது. பெருங்குற்ற வழக்குகளில் சிக்கி பிணையில் வெளிவரமுடியாத வழக்கு பின்னணி கொண்டவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (73%), பாஜகவில் 72% சதவீதத்தினரும் உள்ளனர்.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 41 பேரில் 22 பேர் பிணையில் வெளியே வர முடியாத குற்றங்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் பட்டியலில் வருகின்றனர்.

அடுத்த இடத்தில் பாஜகவின் 13 வேட்பாளர்கள் உள்ளனர். லோக் ஜன சக்தி கட்சியில் 41 வேட்பாளர்களில் 20 பேர் குற்றப் பிண்ணனி கொண்டவர்கள். காங்கிரஸின் 21 வேட்பாளர்களில் 9 பேர் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 244 பேர் இந்தப் பட்டியலில் வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

மொத்த வேட்பாளர்களில் 29 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் மூவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 1064 வேட்பாளர்களில் 375 (35 விழுக்காடு) பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரின் சராசரி வருமானம் ரூ.1.99 கோடியாக உள்ளது. 9 விழுக்காட்டினர் ரூ.5 கோடிக்கு அதிகமாகவும், 12 சதவீதத்தினர் ரூ.2 முதல் ரூ.5 கோடி வருமானம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இதேபோல் ஆர்.ஜே.டி.,யின் அனந்த் குமார் சிங் உள்பட ஐந்து வேட்பாளர்கள் தங்களுக்கென்று எவ்வித சொத்துகளும் இல்லை என்று வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆர்.ஜே.டி.,யின் 39 வேட்பாளர்களும், ஐக்கிய ஜனதா தளத்தின் 24 வேட்பாளர்களும், பாஜகவின் 30 வேட்பாளர்களும், லோக் ஜனசக்தி கட்சியின் 14 வேட்பாளர்களும், காங்கிரஸின் 21 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியின் 12 வேட்பாளர்களும் ஒரு கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளனர்.

கல்வித் தகுதி

முதல்கட்ட வேட்பாளர்களில் 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றவர்களில் 43 விழுக்காட்டினர் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்த வேட்பாளர்கள் 49 விழுக்காட்டினர் உள்ளனர். இதில் 11 விழுக்காட்டினர் பெண்கள். வயதை பொறுத்தமட்டில் 25 முதல் 40 வயது வரையிலான பருவத்தில் 403 வேட்பாளர்கள் உள்ளனர்.

40 முதல் 60 வயது வரையிலான பட்டியலில் 548 பேர் உள்ளனர். 112 வேட்பாளர்கள் 61-80 வரையிலான வயதை கொண்டவர்கள். ஒருவர் மட்டும் 82 வயதை தாண்டியவர் ஆவார். 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் 94 தொகுதிக்கு நவம்பர் 3ஆம் தேதியும், மீதமுள்ள 78 தொகுதிக்கு நவம்பர் 7ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: நெருங்கும் பிகார் தேர்தல்; கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிதிஷ் குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.