ETV Bharat / bharat

பிகாரின் ஜெகன்மோகன் ரெட்டியாக உருவெடுக்கிறாரா தேஜஸ்வி யாதவ்? - மகா கூட்டணி

பாட்னா : ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணிக்கு பிகார் மக்களிடையே பெரும் ஆதரவு எழுந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிகாரின் ஜெகன்மோகன் ரெட்டியாக உருவெடுக்கிறாரா தேஜஷ்வி யாதவ்!

author img

By

Published : Oct 22, 2020, 12:45 PM IST

Updated : Oct 22, 2020, 1:05 PM IST

பிகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, 7.29 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள அம்மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட உள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியை வீழ்த்துவது ஒன்றையே இலக்காகக் கொண்ட இந்த மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக, பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆக்கப்பூர்வமான அரசியல் செயல்பாடுகளாலும், அறிவிப்புகளாலும் பிகார் மக்களின் கவனத்தை தேஜஸ்வி பெற்றுள்ளார். இந்த கூட்டணி தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மகா கூட்டணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தற்போது அம்மக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஆர்.ஜே.டி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தால் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என ஆர்ஜேடியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் அளித்த வாக்குறுதி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக அறிய முடிகிறது. தேர்தல் பரப்புரைக் களத்தில் லாலு பிரசாத் யாதவ் இல்லாத குறையை தேஜஸ்வி பெருமளவில் போக்கியுள்ளார்.

ஆர்.ஜே.டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேஜஸ்வி மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பயணங்களில் அவரது உரையைக் கேட்க இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் திரண்டுவருகின்றனர். குறிப்பாக, மாசதி தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளரை ஆதரித்து நேற்று (அக்டோபர் 21) நடைபெற்ற தேஜஷ்வியின் பரப்புரையில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய மசாதி நகரைச் சேர்ந்த ராகுல் சர்மா என்பவர், "அரசுத் துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் பிகார் பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. எனவே, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தேஜஷ்விக்கு ஆதரவான மனநிலையில் ஒன்று திரண்டு வருகின்றனர். அவரை (தேஜாஷ்வி) பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் திரள்கின்றனர்" என்றார்.

ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியைப் போலவே பிகாரில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவும் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Last Updated : Oct 22, 2020, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.