பிகார் மாநிலம் சிதாப் தியாரா கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் சுதந்திரப் போராட்ட வீரர். இவர் சமூக செயற்பாட்டாளரும்கூட. இவர் நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி இந்திரா காந்திக்கு எதிராகப் போராடியவர்.
இவருடைய மரணத்திற்குப் பிறகு 1999ஆம் ஆண்டு இவருடைய சமூக சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவருடைய பிறந்தநாளில், பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி உள்பட தலைவர்கள் அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இரு கட்சிகளுக்கு இடைபட்ட பிளவின் காரணமாக நிதிஷ்குமாரும் சுசில் குமார் மோடியும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்துவந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜெயபிரகாஷ் நாரயணனின் பிறந்த நாளன்று இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய மனிதர்கள்!