ETV Bharat / bharat

'காங்கிரஸ், சீனா இடையே ரகசிய உறவு'- ஜே.பி. நட்டா - காங்கிரஸ்

டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, காங்கிரசுக்கும், சீனாவுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

ராஜிவ் காந்தி அறக்கட்டளை ஜேபி நட்டா சோனியா காந்தி பாஜக காங்கிரஸ் ரகசிய உறவு

author img

By

Published : Jun 26, 2020, 11:13 AM IST

மத்தியப் பிரதேச ஜன்சம்வாத் பேரணியில் உரையாற்றிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, “காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு 2005-2006ஆம் ஆண்டுகளில் சீனா மற்றும் சீனத் தூதரகம் மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.2 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரத்து 450) நிதி உதவி அளித்துள்ளது.

2017ஆம் ஆண்டு டோக்லாமில் சண்டை நடந்தபோது, இந்தியாவுக்கான சீனத் தூதருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு நடத்தினார். தற்போது கல்வானில் மோதல் நடந்தது. அப்போதும் காங்கிரஸ் நாட்டை தவறாக நடத்த முயற்சித்தது. காங்கிரசுக்கும், சீனாவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது.

ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா எவ்வளவு நன்கொடை அளித்தது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிய விரும்புகின்றனர். இது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ராஜிவ் காந்தி அறக்கட்டளை ஜூன் 21ஆம் தேதி 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைவராக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளார்.

அறங்காவலர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் உள்ளனர்.

இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், விஜயன் மீது பாஜக தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.