ETV Bharat / bharat

பிகார் வெள்ளத்தில் மேலும் ஆறு பேர் உயிரிழப்பு... 19ஆக உயர்வு! - பிகார் உயிரிழப்பு எண்ணிக்கை

பாட்னா: இன்று ஆறு பேர்‌ உயிரிழந்ததையடுத்து, பிகார் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

பிகார்
பிகார்பிகார்
author img

By

Published : Aug 5, 2020, 2:16 PM IST

பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தால் சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை வெள்ளத்தால் 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்று (ஆக.5) மேலும் ஆறு பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய ஏழு லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழையால் , ஏராளமான ஆறுகள் அபாயக் கட்டத்தை தாண்டி பாய்ந்தோடுகிறது.

இன்று பதிவான ஆறு உயிரிழப்புகளில் நான்கு முசாபர்பூர்டிஸ்டிரிக்டிலும், இரண்டு சிவானிலும் நிகழ்ந்தன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேரிடர் மேலாண்மை குழுவினர் அறிக்கையின் படி, பிகாரில் சீதாமர்ஹி, ஷியோஹர், சுபால், கிஷன்கஞ்ச், தர்பங்கா, முசாபர்பூர், கோபால்கஞ்ச், மேற்கு சம்பரன், கிழக்கு சம்பரன், ககாரியா, சரண், சமஸ்திபூர், சிவான், மதுபானி, மாதேபுரா , சஹர்சா ஆகிய 16 மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணியில் என்.டி.ஆர்.எஃப் படையின் 20 குழுவினரும், எஸ்.டி.ஆர்.எஃப் படையின் 13 குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அரசின் 17 நிவாரண முகாம்களில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 1365 சமூக சமையலறைகளில் சுமார் 9.52 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.