பீகார் மாநிலத்தில் இடைவிடாமல் பெய்த கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மங்கள்பூர் கலா என்னும் கிராமம் நீரில் மூழ்கி தீவு போல் காட்சியளிக்கிறது. சம்பரன் மாவட்டத் தலைநகரமான பெட்டியாவிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தைச் சேர்ந்த பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், சில ஆண்கள் தங்களது குடிசைகளின் மேற்பகுதியில் குடியேறத்தொடங்கியுள்ளனர். அவர்கள், அரசிடமிருந்து ஏதேனும் நிவாரண உதவிகள் கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு உள்ளனர்.
அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் வெள்ள நீர் புகுந்து வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. மங்கல்பூர் கிராமத்தில் உள்ளவர்களின் உடமைகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
வெள்ள நீர் புகுந்து ஆறு நாட்களுக்கு மேல் ஆகியும் அரசு தரப்பில் இதுவரை யாரும் வந்து எங்களுக்கு எவ்வித நிவாரண உதவியையும் வழங்கவில்லை என்று அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 51 வன விலங்குகள் பலி!