நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, 51 தொகுதிகளுக்கு இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், பிகார் மாநிலம் சப்பாராவில் (Chhapara) உள்ள 131ஆவது வாக்குப்பதிவு மையத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, ரஞ்சித் பஸ்வான் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.