பிகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் அக்கியுட் என்சிபாலிட்டிஸ் சிண்ட்ரோம் (Acute Encephalitis Syndrome) எனப்படும் மூளைக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் இந்நோயால் அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 128ஆக உயர்ந்துள்ளது. 108 பேர் எஸ்.கே.எம்.சி.எச். மருத்துவமனையிலும், 20 பேர் கெஜிரிவால் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள நிலவரங்கள் குறித்து அறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஸ் குமார் நேரடி ஆய்வில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.