அதிதீவிர புயலான ஃபோனி ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று கரையைக் கடந்தது. பூரி அருகே காலை 8 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கிய ஃபோனி புயல் 10 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்த நேரத்தில் பூரி பகுதியில் 175 கிலோ மீட்டர் வேகத்திலும், புவனேஷ்வரில் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் பயங்கர காற்று வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஃபோனி புயலின் தாக்கத்தால் ஒடிசாவின் புவனேஷ்வர் ரயில் நிலையம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. புயல் கரையைக் கடந்த நேரத்தில் சூறை காற்று வீசியதால் ரயில் நிலையத்தின் மேற்கூரை பறந்து போகும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.