குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மஜ்ஸித்திலிருந்து டெல்லி நுழைவுவாயில் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின்போது வன்முறை வெடித்தது. இதில் அரசு வாகனங்கள், பொதுச்சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை காவலர்கள் இன்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, சந்திரசேகர் ஆசாத்துக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கினார். இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை