ETV Bharat / bharat

இணையத்தில் பரவும் புதிய மோசடி - BEWARE OF THIS NEW ONLINE SCAM!

இணைய வங்கிச் சேவை மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை சைபர் குற்றவாளிகள் சேகரிக்கின்றனர். பின் நாள்தோறும் 100 முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு போலிக் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். ஆந்திர வங்கியிலிருந்து அனுப்பப்படுவது போல அந்த குறுஞ்செய்திகள் இருக்கின்றன.

Internet
Internet
author img

By

Published : Apr 14, 2020, 11:02 AM IST

You have withdrawn INR 25,000 from XYZ ATM. If you have not done this transaction, call this number immediately! We will credit the amount to your bank account.

சைபர் குற்றவாளிகள் நிகழ் கால மோசடிகளில் இதுவும் ஒன்று. சமீபத்தில் யூனியன் வங்கியுடன் இணைக்கப்பட்ட ஆந்திர வங்கி வாடிக்கையாளர்கள்தான் இவர்களின் முதல் இலக்கு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற தவறான தகவல்களைக் கொண்ட எஸ்.எம்.எஸ்-களை மோசடிதாரர்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர். அதை நம்பும் வாடிக்கையாளர்கள் லட்சக் கணக்கில் தங்கள் சேமிப்பு பணத்தை இழக்கின்றனர்.

இறுதியில் வங்கியைத் தொடர்புகொள்ளும்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை வாடிக்கையாளர்கள் உணர்கிறார்கள். பின்னர் சைபர் காவல் துறையினரை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

வாடிக்கையாளரின் தகவல்களை இணையத்தில் ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள், ஓய்வுபெற்ற உயர் அலுவலர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோருக்கு இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். எளிதில் ஏமாறக்கூடிய நபர்களைக் குறிவைத்தே இந்தக் குழுக்கள் இயங்குவதாகக் காவல் துறை கூறுகிறது.

பணம் எடுக்கப்பட்டது போன்ற குறுஞ்செய்தியைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள், பதறி அடித்துக்கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணைத் தொடர்பு கொள்கின்றனர்.

மறுமுனையில், சரளமாக ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசும் மோசடிதாரர்கள், ஹேக் செய்யப்பட்ட தகவல்களைக் கொண்டு வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களைத் துல்லியமாகக் கூறுகின்றனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் இதேபோல ஏமாற்றப்பட்டுள்ளார். மோசடிதாரர்களிடம் யுபிஐ எண்ணைக் கொடுத்த இவரது வங்கிக் கணக்கிலிருந்து சிறிது நேரத்தில் ரூ. 90,000 எடுக்கப்பட்டது.

இணைய வங்கிச் சேவை மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை சைபர் குற்றவாளிகள் சேகரிக்கின்றனர். பின் நாள்தோறும் 100 முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்றப் போலிக் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். ஆந்திர வங்கியிலிருந்து அனுப்பப்படுவது போல அந்த குறுஞ்செய்திகள் இருக்கின்றன.

You have withdrawn INR 25,000 from XYZ ATM. If you have not done this transaction, call this number immediately! We will credit the amount to your bank account - Andhra Bank.

இதுபோன்ற குறுஞ்செய்திகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அதாவது, “நீங்கள் ஆந்திர வங்கி ஏடிஎம்மில் இருந்து 25,000 ரூபாய் எடுத்துள்ளீர்கள். இந்த பரிவர்த்தனையை நீங்கள் செய்யவில்லை என்றால், 9298112345 க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். உங்கள் டெபிட் கார்டை ப்ளாக் செய்ய உடனடியாக 18004251515 ஐ அழைக்கவும். ஆந்திர வங்கி” என்ற குறுஞ்செய்தி அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த எண்களுக்குத் தொடர்புகொள்ளும்போது, மோசடிதாரர்கள் வங்கி அலுவலர்களைப் போலக் காட்டிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தத் தொகை முழுவதுமாக அவர்களின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கின்றனர். பின், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் போனுக்கு ஒரு இணைப்பை அனுப்பி, அதைக் க்ளிக் செய்யச் சொல்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களும் இந்த இணைப்பைக் க்ளிக் செய்கிறார்கள், அங்கு அவர்களின் யுபிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் கேட்கப்படுகிறது. அதை வாடிக்கையாளர்கள் பதிவிட, மோசடிதாரர்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்கத் தொடங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறியும்போது, சைபர் குற்றவாளிகள் தங்கள் அழைப்பைத் துண்டிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.