பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனம் கடந்த 2018-19ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், இந்தியாவின் பிரதமராக இருந்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு அறிவியல் சோதனைகள் குறிப்பாக உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பொக்ரான் சோதனையும் நடைபெற்றது.
இதையும் படிங்க: கார்கில் நாயகனுக்கு 2ஆம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!