நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளன.
அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டுப் பகுதிகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன.
இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அலுவலர், "கடந்த 10 நாள்களில் மட்டும் பெங்களூருவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்று அதிகம் பாதித்த 3 ஆயிரத்து 276 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.