ETV Bharat / bharat

கொத்தடிமைகளாக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவர் மீட்பு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஹெல்ப்லைன்

பெங்களூருவில் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்த ஜார்கண்டைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவர் மீட்கப்பட்டனர்.

பெங்களூரு
பெங்களூரு
author img

By

Published : May 28, 2020, 10:11 AM IST

மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பதாகக் கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவர் பெங்களூருவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஆனால், அவர்களைக் கொத்தடிமைகளாய் நடத்தி, அவர்களிடம் பல மணி நேரம் வேலை வாங்கி, மாதம் வெறும் 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக தொழிற்சாலை நிர்வாகம் அளித்துள்ளது.

தினம் தினம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த இந்தப் பெண்கள், ஒரு கட்டத்திற்கு மேல் கொடுமை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுத்துள்ளனர். அவ்வாறு தப்பிக்க முயற்சி செய்தபோது, மீண்டும் தொழிற்சாலை அலுவலர்களிடம் சிக்கியுள்ளனர்.

அந்த அலுவலர்கள், அவர்களைப் பிடித்து சித்ரவதை செய்து, பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த மற்றொரு குடிபெயர்ந்த பெண் தொழிலாளி, அப்பெண்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பலரிடம் கூறியுள்ளார். அதில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மேற்குறிப்பிட்ட தனியார் தொழிற்சாலையில் இரு பெண்கள் வதைக்கப்படுவதாக ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் அமைப்பான ஸ்வான் (SWAN) அமைப்பினரின் கண்களிலும் பட்டுள்ளது. உடனே அந்த அமைப்பினர் சம்பந்தபட்டவர்களின் விவரங்களைச் சேகரித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

தகவலறிந்து உடனே சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து, அந்த இரு பெண்களையும் மீட்டனர். தற்போது, அந்தப் பெண்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிமுக பிரமுகர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.