ETV Bharat / bharat

2024 தேர்தலுக்கு முன் குடியுரிமை பெறாத மக்கள் வெளியேற்றப்படுவர் - அமித் ஷா - காங்கிரஸ்

சண்டிகர்: வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் இந்தியாவில் குடியுரிமை பெறாமல் இருக்கும் மக்கள் வெளியேற்றப்படுவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அமித் ஷா
author img

By

Published : Oct 9, 2019, 9:28 PM IST

ஹரியானா மாநிலம் கைத்தாலி மாவட்டத்தில் இன்று பாஜக சார்பாக தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக வாக்கு சேகரிக்க செல்லும் முன் இந்தியாவில் குடியுரிமை பெறாமல் சட்டவிரோதமாத இருக்கும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். அது தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக நிற்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு தக்க பதிலாக அமையும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு யார் இதை குறித்து புரியா வைப்பார்கள்?, கைத்தாலி மக்கள்தான் காங்கிரஸ் கட்சிக்கு இது குறித்து எடுத்துரைக்க வேண்டும், குறிப்பாக ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவிற்கு கூற வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு சென்றபோது, மோடி அடிக்கடி அமெரிக்கா செல்வதாக சுர்ஜிவாலா குற்றம்சாட்டினார், பிரதமர் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது அவருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது" என்று சாடினார்

மேலும் படிக்க: ஹரியானா தேர்தல்: 90 தொகுதிகளுக்கு 1,168 பேர் போட்டி!

Intro:Body:

amit shah haryana

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.