ETV Bharat / bharat

13 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் பெண் குழந்தை: கருணைக்கொலை வேண்டி முதலமைச்சருக்கு கடிதம்

புவனேஸ்வர்: 13 ஆண்டுகளாக படுக்கையிலிருக்கும் தனது பெண் குழந்தையை கருணைக்கொலை செய்ய பொருளாதார உதவி செய்யுமாறு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

Bedridden for 13 years
author img

By

Published : Oct 19, 2019, 8:19 PM IST

ஒடிசா மல்ஹங்கரி மாவட்டம் சக்ரிகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பா கலகுரா. இவர் கடந்த 13 ஆண்டாக நோயினால் அவதிப்பட்டுவருகிறார். இவரால் எழுந்து நடக்க முடியாது.

13 ஆண்டாக படுத்த படுக்கையாகவே உள்ளார். அவ்வப்போது அவரின் குடும்பத்தினர் படுக்கையிலிருந்து எடுத்து, நாற்காலியில் அமரவைத்து பின்னர் படுக்கையறையில் படுக்கவைத்து விடுவார்கள்.

இது 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்கிறது. இவரை குணமாக்க பல்வேறு மருத்துவ உதவிகள் எடுத்துக் கொண்டும் சோகம் தொடர்கிறது.
இந்த நிலையில் அவரின் தாயார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தனது மகளை கருணைக் கொலை செய்ய பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். இது குறித்து சம்பாவின் தந்தை கூறும்போது, ”ஆறாம் வகுப்பு படிக்கும் போதே சம்பாவிற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டது” என வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.

இதையும் படிங்க: ஊழல் செய்தவர்கள் பதவி நீக்கம்: முதலமைச்சர் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.