கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி (43) கடந்த இரண்டாம் தேதி நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், இதயத்தின் ரத்த குழாயினை விரிவுபடுத்துவற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலையை பரிசோதித்த இதய நோய் சிகிச்சை நிபுணர் தேவி ஷெட்டி கூறுகையில், " கங்குலியின் உடல்நிலையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அவரது இதயம் சீரான நிலையில் இருக்கிறது" என்றார்.
இதையடுத்து, நாளை அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சவுரவ் கங்குலிக்கு எக்கோ கார்டியோ கிராஃபி பரிசோதனை - மருத்துவமனை தகவல்