ETV Bharat / bharat

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்? தீர்மானிக்கப்போகும் பட்டியலின வாக்குகள்! - மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளின் வெற்றியை பட்டியின தீர்மானிக்கவுள்ளனர்.

தலித்
தலித்
author img

By

Published : Oct 18, 2020, 7:16 PM IST

மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்துவந்த ஜோதிராதித்ய சிந்தியா திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) பதவி விலகியதால், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கட்சி மாறிய எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாகவுள்ள தொகுதிகளுக்கும் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பட்டியலின வாக்குகள் மிகப்பெரிய பங்கு வகிக்கவுள்ளதாகவும் அவர்களின் வாக்குகளை பெரும்பான்மையாக பெறுபவரே வெற்றிபெறவுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

முதல்முறையாக, இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், அவர்களின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், இத்தேர்தலும் அதனை எடுத்துரைக்கும் எனவே கூறப்படுகிறது. இருப்பினும், குவாலியர் சம்பல் பகுதியில் அவர்கள் வலுவாகவே உள்ளனர். இப்பகுதியின் கீழ் வரும் தொகுதிகளில் அவர்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகின்றனர்.

கடைசி தேர்தலில், சம்பல் பகுதியில் உள்ள ஒரு தொகுதி உள்பட இரண்டு தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிபெற்றது. குவாலியர் சம்பல் பகுதியில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. கரேரா, பந்தர், தாப்ரா, அம்பா, கோஹத், அசோக்நகர் சன்வார், சான்சி, அகர் ஆகிய தனி தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 28 தொகுதிகளில், 25 தொகுதிகளில் பட்டியலின வாக்குகள் 20 விழுக்காட்டிற்கு மேல் உள்ளன. குவாலியர் சம்பல் பகுதியில் 16 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த காலத்தில் இதில் 11 தொகுதிகளில் மாயாவதி கட்சி வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டது. இதன் காரணமாகவே, மாயாவதி கட்சியின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் குறைந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தில் போட்டியிட மாட்டோம் என அறிவித்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி, இத்தேர்தலில் போட்டியிடுவதன் காரணத்தை அக்கட்சியே விளக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் தொண்டர்களையும் அமைப்பின் பலத்தை நம்பியே பாஜக களமிறங்குவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜ்நீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அவர்களின் ஒரே நோக்கம் காங்கிரஸ் கட்சியை தோல்வி அடைய செய்வதே எனவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஹத்ராஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாயாவதி அமைதி காப்பதன் மூலம் அவர் பாஜகவுடன் ஒரு புரிதல் வைத்துள்ளார் என்பது தெளிவாகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிகாரில் பரப்புரையைத் தொடங்கவுள்ள ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.