கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான நாராயண் ராவ் கடந்த 1ஆம் தேதி (செப்.1) கோவிட்-19 பாதிப்பின் காரணமாக பெங்களூருவில் உள்ள மனிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 65 வயதான நாராயண் ராவ் அம்மாநிலத்தின் பசவகல்யான் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராவார்.
கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கர்நாடாக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி நேற்று (செப்.23) கரோனாவால் உயிரிழந்தார். இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கரோனாவால் பலியானது அம்மாநில மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கார்ப்பரேட்மயத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தை நாம் பார்க்கப் போகிறோம்: யோகேந்திர யாதவ்