கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அரசின் விதிமுறைகளின்படி, பெங்களூருவில் உள்ள சலூன் கடைகள் இயங்கிவருகின்றன. அப்படி ஒரு கடையில், கரோனா வைரஸ் பரவாமலிருக்க முடி திருத்துபவர்கள் பி.பி.இ. கிட் மற்றும் கவச உடை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களை கிருமி நாசிகள் கொண்டு கை கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதையும் படிங்க: சலூன் கடைகள் திறப்பு: பதிலளிக்க அரசுக்கு உத்தரவு!