ETV Bharat / bharat

'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது'- சுதேஷ் வர்மா - இந்திய பொருளாதாரம்

ஹைதராபாத்: இந்தியா- சீனா இடையே உச்சக்கட்ட அமைதியின்மை நிலவும் நிலையில், சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை நாம் தொடங்க முடியுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா பதிலளித்தார்.

Sudesh Verma BJP national spokesperson boycotting of Chinese products anti-China sentiment இந்தியா சீனா மோதல் லடாக் வன்முறை சீனப் பொருள்களுக்கு தடை இந்திய பொருளாதாரம் சுதேஷ் வர்மா

author img

By

Published : Jun 20, 2020, 9:34 AM IST

லடாக்கின் கிழக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-16ஆம் தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் காரணமான நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனப் பொருள்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா, ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையேயான பதற்றம், எல்லைப் பிரச்னை, சீனப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்திய வணிகர்கள் பாதிப்பு

இது குறித்து சுதேஷ் வர்மா கூறுகையில், “சீனாவுடனான வர்த்தகம் இந்திய உற்பத்தியாளர்கள் பலரை காயப்படுத்துகிறது என்று சிலர் வாதிடலாம். இது உண்மையல்ல. இந்திய உற்பத்தியாளர்களுக்கும் வணிகங்களுக்கும் அரசு உதவும் என்பதுதான் உண்மை.

சீனாவிலிருந்து அனைத்தும் முழுமையான பொருள்களாக வணிகர்கள் இறக்குமதி செய்வதில்லை. மூலப்பொருள்களும் இறக்குமதி செய்து, நம் நாட்டில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும் உள்ளனர். பொதுவாக, வர்த்தகம் நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும். அந்தவகையில், உலகளவில் இரண்டாவது பெரிய மின்னணு கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் உற்பத்தியாளராக இந்தியா சமீபத்தில் உருவெடுத்தது.

லடாக் பிரச்னை

இந்தியர்கள் சீனப் பொருள்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். இதே முனைப்புடன், இந்திய உற்பத்தியாளர்கள் தங்களின் வணிகம், சேவையை உலகின் மூலை முடுக்கெங்கிலும் விரிவுப்படுத்த வேண்டும்.

இந்தியா ஆக்கிரமிப்பு நாடு அல்ல. சீனாவின் வன்முறையால் எங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை காண்கிறோம். நாங்கள் நிச்சயம் இரு நாடுகளுக்கு இடையே எல்லைக்கோட்டை அமைப்போம். கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் வன்முறை 1962ஆம் ஆண்டுகளிலே தொடங்கிவிட்டது.

டிக்- டாக் தடை?

பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் தொடர்பாக உளவுத்துறை புலனாய்வு அமைப்பு 52 சீன மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள செல்போன் செயலிகளுக்கு சிவப்பு கொடி காட்டியுள்ளது.

அதில், டிக்டாக், யூசி புரவ்ஸர் (UC Browser), ஜென்டர் (Xender), ஷேர் இட் (SHAREit) உள்ளிட்ட 52 செயலிகள் உள்ளன” என்றார்.

திபெத்- நேபாளம் விவகாரம்

இதையடுத்து எல்லைப் பிரச்னை குறித்து அவர் பேசுகையில், “இந்தியாவுக்கும், திபெத்துக்கும் இடையே நல்ல உறவு நீண்ட நாள்களாக இருந்துவருகிறது. தர்மசாலாவில் ஏராளமான திபெத்தியர்கள் தங்கியுள்ளனர். திபெத்தின் அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து பேசும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

ஆகவே நாட்டின் ஒரு அங்குலம் இடம் கூட எனக்கு சொந்தமானது என்று எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது. நாங்கள் இதனை சட்டப்பூர்வமாக அணுகுவோம். நேபாளத்துடன் இந்தியாவுக்கு நூற்றாண்டு காலமாக பிரச்னை இல்லை. சீனாவுடனும் சகோதரத்துவ உறவிலேயே இருந்தோம். தற்போது நேபாளத்துடன் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைகள் நிச்சயமாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். நேபாளத்தை பொறுத்தவரை பிரச்னை எங்களிடம் இல்லை. நாங்கள் இதுபோன்ற பிரச்னைகளை விரும்பவும் இல்லை. எல்லை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்கும்” என்றார்.

சீனாவுக்கு எச்சரிக்கை

மேலும் சீனாவை மறைமுகமாக எச்சரித்து, உலகை எந்தவொரு ஒற்றை சக்தியும் ஆட்சி செய்யவில்லை என்பதை கடந்த காலங்களில் இருந்தே நாம் பார்த்துவருகிறோம்.

சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டுமல்ல வியட்நாம், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளுடனும் எல்லை பிரச்னை உள்ளது.

'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது'- சுதேஷ் வர்மா

ஒற்றை சர்வாதிகாரம் ஒருபோதும் வெல்லாது” என்றார். அப்போது கடந்த காலங்களில் சர்வாதிகார நாடாக திகழ்ந்த நாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: லடாக் வன்முறை: தயார் நிலையில் இந்திய போர் விமானங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.