மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில், "வங்கதேசத்தினர் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் இல்லையென்றால் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா பாணியில் வெளியேற்றப்படுவீர்கள்" என்ற சர்ச்சைக்குறிய வாசகத்துடன் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சகோதரரும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.) தலைவருமான ராஜ் தாக்ரேவின் புகைப்படமும் அவரது மகன் அமித் தாக்கேவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்து. முன்னதாக பிப்ரவரி 9ஆம் தேதி மிகப் பெரிய பேரணி ஒன்றை ராஜ் தாக்ரே அறிவித்திருந்தார்.
பேரணி குறித்து பேசிய அவர், "பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறிய அந்நியர்களை வெளியேற்ற மிகப் பெரிய பேரணி நடத்தப்படவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றிய விவாதம் ஒருபுறம் இருக்கலாம். ஆனாலும் எங்கோ இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு நாம் ஏன் அடைக்கலம் தரவேண்டும்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: எல்கர் பரிஷத் வழக்கு - தேச துரோக வழக்கு இல்லை... 11 பேர் மீது உபா சட்டம்!