ETV Bharat / bharat

வங்கதேச பிரதமர் இந்தியா வருகை - ஷேக் ஹசீனா, நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்தடைந்தார்.

Sheikh Hasina
author img

By

Published : Oct 3, 2019, 4:40 PM IST

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, தலைநகர் டெல்லியில் உலக பொருளாதார மன்றம் ஏற்பாட்டில் நடக்கவுள்ள பொருளாதார கருத்தரங்கத்தில் கலந்துகொள்கிறார்.

இதையடுத்து வருகிற 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்படவுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து 3 முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். கடந்த 27ஆம் தேதி நரேந்திர மோடியும், ஷேக் ஹசீனாவும் 73ஆவது ஐ.நா. பொதுக்கூட்டத்தில் சந்தித்துக் கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் இருவரும் சந்தித்து பேசவுள்ளனர். அப்போது, ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், தீஷ்டா நதி பங்கீட்டு பிரச்னை குறித்தும் பேசப்படலாம் என்றும் தெரிகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.