கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
அதுமட்டுமின்றி, காவல் துறையினர் பலர் மக்களிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகின்றனர்.
அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்களிடம் காவலர்கள் கரோனா வைரஸ் உருவமுள்ள தலைக்கவசம் அணிந்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
அவர்கள் தன் பெயர் கரோனா என்றும், தெருவில் சுற்றித் திரிபவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் மரணத்திற்கு காரணமாக அமைவேன் என்றும் எச்சரிக்கை செய்தனர்.
இதையும் படிங்க:நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 24 பேருக்கு கரோனா!