ETV Bharat / bharat

பெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து! 2 பேர் பலி - contruction building collapsed

பெங்களூரு: யஷ்வந்த்புரா ஆர்எம்சி அருகில் கட்டுமானப் பணியிலிருந்த கட்டடம் இன்று அதிகாலை இடிந்துவிழுந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

building collapsed
author img

By

Published : Apr 5, 2019, 11:18 AM IST

பெங்களூரு மாவட்டம் யஷ்வந்த்புரா பகுதியில் கட்டுமானப் பணியிலிருந்த ஒரு கட்டடம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் சிக்கி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல், பீகாரைச் சேர்ந்த ராகேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலிருந்த கேசி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

பெங்களூரு கட்டட விபத்தில் 2 பேர் பலி

இது குறித்து பெங்களூரு வடக்கு மண்டல துணை ஆணையர் சசிகுமார், ஆர்எம்சி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விபத்து குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கட்டட இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியுள்ளதால், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்த விபத்து குறித்து ஆர்எம்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கட்டட உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.