விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகில் உள்ள ஹைராபாத்தில் ஆண்டுதோறும் பிரமாண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் பிரமாண்டமான விநாயகர் சிலையை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானாவின் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் மற்றும் அவரது மனைவியும் ஹைராபாத்திற்கு வந்து விநாயகரை தரிசித்துவிட்டுச் சென்றனர்.
மேலும், இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானவின் அமைச்சர் சீனிவாசன் யாதவ் ஆகியோரும் வந்து இந்த விநாயகரை வழிபட்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்டாரு தத்தாத்ரேயா, ஆளுநராக பொறுப்பேற்கும் முன் கடவுளின் ஆசிர்வாதத்தால் எல்லா நன்மையும் நடைபெறவேண்டும் என்று நாட்டில் ஒருமைப்பாட்டையும் கலாச்சாரத்தையும் வளர்க்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன் என்று தெரிவித்தார்.