இலங்கையைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு 2014ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த அமைப்பிற்கு இந்தியாவில் தற்போது ஆதரவு பெருகி வருவதால் இந்தத் தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை, நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்படுவதால் 2024ஆம் ஆண்டு வரை தடையை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த அமைப்பிற்கு அதிகப்படியான ஆதரவு பெருகிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.