உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேஷன் கடையை எங்கு இடம் மாற்றுவது என்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் உள்ளூர் அரசு அலுவர்களும் பங்கேற்றனர்.
அப்போது இருதரப்பினரிடையே கடுமையாக வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் இருதரப்பையும் சமாதானப்படுத்த அலுவலர்கள் முயன்றனர். அப்போது உள்ளூர் பாஜக பிரமுகர் தீரேந்திர சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடினர். பின்னர் பாஜக பிரமுகர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜெய்பிரகாஷ் பால் என்ற இளைஞர் உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக உள்ளூர் நிர்வாகியின் சகோதரர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த அரசு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை எனக் கோரியுள்ளார்.
இது குறித்து எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறுகையில், “திரேந்திர பிரதாப் சிங் தற்காப்புக்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அவர் இதை செய்யவில்லை என்றால், அவரது குடும்பத்தினர், கூட்டாளிகள் கொல்லப்பட்டிருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
-
बलिया में सत्ताधारी भाजपा के एक नेता के, एसडीएम और सीओ के सामने खुलेआम, एक युवक की हत्या कर फ़रार हो जाने से उप्र में क़ानून व्यवस्था का सच सामने आ गया है.
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
अब देखें क्या एनकाउंटरवाली सरकार अपने लोगों की गाड़ी भी पलटाती है या नहीं. #नहीं_चाहिए_भाजपा
">बलिया में सत्ताधारी भाजपा के एक नेता के, एसडीएम और सीओ के सामने खुलेआम, एक युवक की हत्या कर फ़रार हो जाने से उप्र में क़ानून व्यवस्था का सच सामने आ गया है.
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 16, 2020
अब देखें क्या एनकाउंटरवाली सरकार अपने लोगों की गाड़ी भी पलटाती है या नहीं. #नहीं_चाहिए_भाजपाबलिया में सत्ताधारी भाजपा के एक नेता के, एसडीएम और सीओ के सामने खुलेआम, एक युवक की हत्या कर फ़रार हो जाने से उप्र में क़ानून व्यवस्था का सच सामने आ गया है.
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 16, 2020
अब देखें क्या एनकाउंटरवाली सरकार अपने लोगों की गाड़ी भी पलटाती है या नहीं. #नहीं_चाहिए_भाजपा
மேலும், இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “உத்தரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை அரசு அலுவலர்கள் முன்பே வெளிச்சத்திற்கு வந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...பிகாரில் அடுத்த அரசை நிர்ணயிக்கும் சக்தி மாயாவதி!