ETV Bharat / bharat

தனிமைப்படுத்தலின்போது உண்ண வேண்டிய சமச்சீர் உணவு!

தனிமைப்படுத்தலின்போது சமச்சீரான உணவை உட்கொள்வது, போதுமான தூக்கம், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது ஆகியவை நோயிலிருந்து விரைவாக மீள உதவியாக இருக்கும் என்று ஊட்டச்சத்து வல்லுநர் சுஜாதா ஸ்டீபன் கூறுகிறார்.

author img

By

Published : Mar 28, 2020, 8:20 AM IST

Updated : Mar 28, 2020, 10:34 AM IST

தனிமைப்படுத்தலின்போது வேண்டிய சமச்சீர் உணவு

பொது ஊரடங்கு விடப்பட்டுள்ள கரோனா தொற்றின் காலம் இது. பொதுவான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இருந்தாலே, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் இந்த அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவமனைக்கு மக்கள் ஓடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தொற்றுக்கான வாய்ப்பு இருக்கலாம் எனும் அச்சத்தில் அவர்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படி கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் அறிகுறிகள் குறையவில்லை என்றால், மீண்டும் மருத்துவமனைக்கு வருமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உணவும் மற்ற முன்னெச்சரிக்கையான செயல்களும் பாதிப்பிலிருந்து விடுபட ஏதுவாக அமைகின்றன. சமச்சீரான உணவை உட்கொள்வது, போதுமான தூக்கம், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது ஆகியவை நோயிலிருந்து விரைவாக மீள உதவியாக இருக்கும் என்கிறார், ஊட்டச்சத்து வல்லுநர் சுஜாதா ஸ்டீபன்.

சமச்சீரான ஓர் உணவு என்பது வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய உயிர்ச் சத்துகளும், இரும்பு, செலினியம், துத்தநாகம் ஆகிய தாதுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த உயிர்ச் சத்துக்கள், தாதுக்களில் உள்ள நுண் ஊட்டச்சத்துகள், பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக வினைபுரியக் கூடியவை. இவை, மனித உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூடுதலாக்கும். மனிதர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவிழந்து போகும்போது, மனித உடலானது எளிதில் நோய் தாக்குதல்களுக்கு இரை ஆகிறது. ஒவ்வொருவரும் உணவும் உடல் நலமும் நல்லபடியாக இருப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இந்த அடிப்படையில், எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என நம்மிடம் விளக்கினார், ஊட்டச்சத்து வல்லுநர் சுஜாதா.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சத்தற்ற விரைவு உணவு வகைகள், காற்றேற்றம் செய்யப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் ஆகியவை, நோய் எதிர்ப்பு ஆற்றலை பாதிக்கச்செய்யும். இத்தகைய உணவுகளை உட்கொள்வதானது, சுவாச மண்டலத்தை கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்பாக அமைகிறது. இந்த நிலைமையில், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகையிலை வகையறாவிலிருந்து அதிக அளவில் தள்ளி இருக்க வேண்டும். இல்லை என்றால், நுரையீரலானது தன் நோய் எதிர்ப்பாற்றலை இழந்துவிடும்.

கோவிட்-19 நோய் பரவத் தொடங்கிய பிறகு, நிறைய பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதில் அவர்களுக்கு சற்று அலட்சியம் ஏற்படக்கூடும். ஒன்று, சாப்பாட்டைத் தவிர்த்து விடுகிறார்கள் அல்லது அதிக அளவில் உணவை உட்கொள்கிறார்கள். இதனால் செரிமான மண்டலத்தில் சேதம் ஏற்படுகிறது. எனவே, உணவு நேரத்தை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

என்ன ஆனாலும் சரி, மது, புகையிலைப் பழக்கத்தை தவிர்த்தாக வேண்டும். வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். யோகாவும் தியானமும் மனதைத் தளர்வடையச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சியுடன் இந்த சுவாசப் பயிற்சியானது அருமையாக பலன் அளிப்பதாக இருக்கும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான தவறான தகவல்களை ஒதுக்கித் தள்ளவேண்டும் என்பது முதன்மையான அறிவுறுத்தல் ஆகும்.

ஊட்டச்சத்துகள், அவை சார்ந்த உணவு வகைகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது. இது முழுமையானது அன்று.

வைட்டமின் ஏ: நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும். முட்டையின் மஞ்சள் கரு, பாதாம், பிஸ்தா, முழு தானியங்கள், இலையுள்ள காய்கறிகள், கேரட் ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது.

வைட்டமின் பி: பி 6, பி 9 மற்றும் பி- 12 ஆகியன பாக்டீரியா, வைரஸ் நோய்த் தொற்றை எதிர்த்து நிற்கும். கோழி இறைச்சி, மீன், முட்டை, ஆடு இறைச்சி, பாதாம், வேர்க் கடலை, பீன்ஸ், பால் ஆகியவற்றில் மிகுதியாக இருக்கும்.

வைட்டமின் சி: உடலில் நச்சுத் தன்மை உருவாகாமல் தடுக்கிறது. செல்களைத் தூய்மை ஆக்குகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் முக்கியமான பங்கை வகிக்கிறது. எலுமிச்சை, செர்ரி, கிவி, தக்காளி ஆகியவற்றில் இச்சத்து உள்ளது.

வைட்டமின் ஈ: செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. பிஸ்தா, அக்ரூட் பருப்புகள் மற்றும் தாவர எண்ணெய்கள் ஆகியவை இச்சத்தின் முதன்மையான மூலங்கள் ஆகும்.

வைட்டமின் டி: சுவாச நோய்த் தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. சூரிய ஒளியில் இயற்கையாகக் கிடைக்கிறது. மீன், முட்டை, பால் ஆகியவற்றிலும் வைட்டமின் டி கிடைக்கிறது.

துத்தநாகம்: நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவும் நொதிகளுக்கு துணை செய்கிறது. நுண்ணுயிரித் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. கடல் உணவுகள், கொட்டை வகைகள், கோழி இறைச்சியிலும் இந்தச் சத்து கிடைக்கிறது.

நெருக்கடியான இந்தக் காலகட்டத்துக்கான சமச்சீரான ஒரு உணவுமுறை:

காலை உணவு: இட்லி, தோசை, முழு தானியங்கள், தானியங்களால் ஆன உப்புமாவை உட்கொள்ள வேண்டும். ஒரு கோப்பை பாலுடன் 50 - 80 கிராம் முளைத்த காய்கறிகள். முற்பகல் உணவாக, மோர், எலுமிச்சைப் பழம், பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். கட்டாயமாக, பழம் உட்கொள்ள வேண்டும்.

மதிய உணவு: 200 கிராம் சிவப்பு அரிசி, 200 கிராம் காய்கறிகள், பருப்பு, 100 கிராம் கோழி இறைச்சி, தயிர் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்

பிற்பகல் 3 மணிக்கு, சிறிது சிற்றுண்டியுடன் காஃபி அல்லது தேநீர் எடுத்துக் கொள்ளலாம்.

இரவு உணவு: 8:30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். கோதுமை, சோளத்தால் செய்யப்பட்ட ரொட்டியுடன், காய்கறி, ஒரு கப் தயிரையும் சேர்த்து உண்ணலாம். தூங்குவதற்கு முன் ஒரு கோப்பை மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பது நல்ல பலன் தரும்.

இதையும் படிங்க: வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும் அவலம் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

Last Updated : Mar 28, 2020, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.