பக்ரீத் பண்டிகையானது இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ்பயணமும் இந்த நாளில் நிறைவேற்றப்படுவதால் இதை ஹஜ் பெருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள ஜும்மா மஸ்ஜித், கடற்கரை காந்தி திடல், காரைக்காலில் உள்ள பெரியபள்ளி வாசல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
தொழுகை நடைபெறும் அனைத்து பள்ளிவாசல்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.