பஹ்ரைன் நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனை ஒன்றுக்கு, காஸ்ட்ரோ என்ட்ரோலோஜிஸ்ட், கார்டியாலஜிஸ்ட், யுரோலாஜிஸ்ட், காஸ்மாலஜிஸ்ட், அவசர சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரிவுகளில் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். 3 வருட பணி அனுபவமுள்ள ஆண்/பெண் லேப் டெக்னீஷியன்கள், சிகிச்சை, எக்ஸ்ரே, இசிஜி (பெண்கள் மட்டும்), எக்கோ (பெண்கள்) தேவைப்படுகிறார்கள். 5 வருட பணி அனுபவமுள்ள பிஎஸ்சி/ டிப்ளமோ நர்சிங் படித்த செவிலியர்கள், மைக்ரோபையாலஜிஸ்ட் மற்றும் 3 வருட பணி அனுபவமுள்ள பிசியோதெரபிஸ்ட் (பெண்) தேவைப்படுகிறார்கள்.
மாதம் மூன்று லட்சத்து 76 ஆயிரம் முதல் 66 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். சலுகைகள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அளிக்கப்படும். தகுதி உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார், ஆகியவற்றின் நகல்கள், வெள்ளைநிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemcldr1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைத்தளம் மூலமாகவும், 04422505886/ 22502267 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: வைகோ சாடல்