ETV Bharat / bharat

பாபர் மசூதி விவகாரம்: ஜூலை 24இல் அத்வானி வாக்குமூலம் அளிக்க உத்தரவு!

author img

By

Published : Jul 20, 2020, 7:20 PM IST

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானியி வரும் ஜூலை 24ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி விவகாரம்: அத்வானியிடம் விசாரணை

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குற்றவியல் சட்டப்பிரிவு 313இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரின் வாக்குமூலங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்துவருகிறது. ஜூலை 23ஆம் தேதி பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், ஜூலை 24ஆம் தேதி அத்வானியும் தங்களது வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய சிறப்பு நீதிபதி எஸ்.கே. குப்தா உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விசாரணையை முடிப்பதற்காக, அன்றாடம் விசாரணைகளை நடத்திவரும் சிபிஐ நீதிமன்றம், ஜூலை 22ஆம் தேதி சிவசேனா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதீஷ் பிரதானைக் காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஒருவரான சுதிர் கக்காட், நீதிமன்றத்தில் ஆஜராகி தான் நிரபராதி என்றும், அரசியல் காரணங்களுக்காக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தன் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தியதாகவும் கூறினார்.

பாஜக தலைவர் உமா பாரதியும் இந்த மாத தொடக்கத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அரசியல் காரணங்களுக்காக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தன்னைப் பழவாங்குவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.