ETV Bharat / bharat

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்புக்கு முன் வழக்கு குறித்த விரிவான பார்வை - லால் கிருஷ்ண அத்வானி

28 ஆண்டுகளாக ஒரு பெரிய காத்திருப்புக்குப் பிறகு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்கான நாள் நெருங்கிவிட்டது. லக்னோவைச் சேர்ந்த சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர யாதவ் அளிக்கப்போகும் தீர்ப்பை ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

babri-masjid
babri-masjid
author img

By

Published : Sep 30, 2020, 1:43 AM IST

Updated : Sep 30, 2020, 9:43 AM IST

இந்தியாவின் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப். 30) வழங்கப்பட உள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர யாதவ் காலை 10.30 மணியளவில் தீர்ப்பை வழங்குகிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் இறந்துவிட்டனர். தீர்ப்பை அறிவிக்கும் நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில், பாஜக முக்கியத் தலைவர்கள் லால் கிருஷ்ண அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பலரை, அவர்களின் வயது காரணமாக தீர்ப்பு வழங்கப்படும்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படாமல் உள்ளது, இதற்கு கரோனா நோய்த்தொற்றும் ஒரு காரணமாகும். இருப்பினும், இந்த வழக்கில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார், பவன் பாண்டே ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிருடன் இருப்பவர்கள்

எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுதிர் கக்கர், சதீஷ் பிரதான், ராம் சந்திர காத்ரி, சந்தோஷ் துபே, கல்யாண் சிங், உமா பாரதி, ராம் விலாஸ் வேதாந்தி, வினய் கட்டியார், பிரகாஷ் சர்மா, காந்தி யாதவ், ஜெய் பன் சிங், லல்லு சிங், கமலேஷ் திரிபாதி, ப்ரிஜ் பூஷன் சிங், ராம்ஜி குப்தா, மஹந்த் நிருத்யா கோபால் தாஸ், சம்பத் ராய், சாக்சி மகாராஜ், வினய் குமார் ராய், நவீன் பாய் சுக்லா, தர்மதாஸ், ஜெய் பகவான் கோயல், அமர்நாத் கோயல், சாத்வி ரிதம்பரா, பவன் பாண்டே, விஜய் பகதூர் சிங், ஆர்.எம். ஸ்ரீவத்சவா, தர்மேந்திர சிங் குர்ஜார், ஓம்பிரகாஷ் பாண்டே, ஆச்சார்யா தர்மேந்திரா.

இறந்தவர்கள்

பரம்ஹான்ஸ் ராம்சந்திர தாஸ், வினோத் குமார் வத்ஸ், ராம் நாராயண் தாஸ், டி.பி. ராய், லக்ஷ்மி நாராயண் தாஸ், ஹர்கோவிந்த் சிங், ரமேஷ் பிரதாப் சிங், தேவேந்திர பகதூர், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், விஷ்ணுஹாரி டால்மியா, மரேஷ்வர் சாவே, மகந்த் அவைத்யாநாத் மகாமண்டலேஷ்வர், ஜகதீஷ் முனி மகாராஜ், பைகுந்த் லால் ஷர்மா, சதீஷ்குமார் நகர் மற்றும் பாலா சாஹேப் தாக்கரே.

டிசம்பர் 6, 1992

1992 டிசம்பர் 6ஆம் தேதி திட்டமிடப்பட்ட ‘கர்சேவா’ அல்லது புனித சேவையில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அயோத்தியை அடையக்கூடிய கரசேவகர்களின் எண்ணிக்கையை நீதிமன்றம் நிர்ணயிக்கவில்லை. சில சமூகவிரோத சக்திகள் காரணமாக, நிலைமை கட்டுக்கடங்காமல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முதலாவது முதல் தகவல் அறிக்கை ராம ஜென்மபூமி காவல் நிலையத்தில் 6.15 மணியளவில் பதிவுசெய்யப்பட்டது, இதில் லட்சக்கணக்கான கரசேவகர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தாலும் அவர்களில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

முதலாவது முதல் தகவல் அறிக்கையை தாக்கல்செய்த 10 நிமிடங்களுக்குப் பிறகு, ராம ஜென்மபூமி காவல் துறை பொறுப்பாளராக இருந்த கங்கா பிரசாத் திவாரியின் புகாரின்பேரில் மற்றொரு முதல் தகவல் அறிக்கை 6.25 மணிக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் அரசியலின் பங்களிப்பு மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டாவது முதல் தகவல் அறிக்கை விசாரணைக்காக உள்ளூர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், வழக்கு இரண்டாவது நாளில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் முதலமைச்சர் கல்யாண் சிங் ராஜினாமா செய்தார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தது. அதன்பிறகு, மொத்த வழக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கிய சிபிஐ, 49 பேர் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. இந்த வழக்கின் விசாரணை இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. விசாரணை ரே பரேலி, லக்னோ ஆகிய இரு இடங்களில் நடத்தப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட முக்கியமான தலைவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை ரே பரேலியில் நடந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்கள் தொடர்பான இரண்டாவது வழக்கு விசாரணை லக்னோவில் நடந்தது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ரே பரேலியிலிருந்து லக்னோவுக்கு மாற்றியது. அங்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாதங்களைக் கேட்ட பின்னர் விசாரணை முடிந்தது. இப்போது செப்டம்பர் 30, 2020 (இன்று) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த ஒரு பார்வை

  • 1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி கட்டடம் இடிக்கப்பட்ட பின்னர், பைசாபாத்தில் ஒரேநாளில் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. முதலாவது முதல் தகவல் அறிக்கை பெயரிடப்படாத லட்சக்கணக்கான கரசேவகர்களுக்கு எதிராகவும், இரண்டாவது அறிக்கையில் லால் கிருஷ்ணா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பால் தாக்கரே, உமா பாரதி உள்பட 49 பேருக்கு எதிராகவும் இருந்தது. அவர்கள் மீது பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
  • 1993ஆம் ஆண்டில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீதான குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு ரே பரேலி நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு வழக்கு லக்னோ நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. அக்டோபரில், இரண்டு வழக்குகளையும் ஒன்றிணைத்து சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தது, அதில் லால் கிருஷ்ணா அத்வானி, பிற தலைவர்கள் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டியிருந்தது.
  • 1996ஆம் ஆண்டில், இரு வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பது தொடர்பாக உ.பி. அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவியல் சதித்திட்டத்தை சேர்த்தது. இதை எதிர்த்து அத்வானி மற்றும் பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
  • மே 4, 2001 அன்று, அத்வானி, மற்றவர்கள் மீதான சதித்திட்ட குற்றச்சாட்டை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீக்கியது.
  • 2003இல், சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தது. எல்.கே. அத்வானிக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ரே பரேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு அத்வானி, மற்றவர்களுக்கு எதிரான சதித்திட்ட குற்றச்சாட்டையும் சேர்த்து வழக்கை தொடர்ந்து நடத்துமாறு கூறியது.

மே 23, 2010 அன்று, லால் கிருஷ்ண அத்வானி, மற்றவர்களுக்கு எதிரான சதித்திட்ட குற்றச்சாட்டை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2012ஆம் ஆண்டில், சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, குற்றச் சதித்திட்ட குற்றச்சாட்டைத் தொடர்வதற்கு அனுமதித்தது மட்டுமல்லாமல், வழக்கு விசாரணையை விரைவுபடுத்தவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

  • ஏப்ரல் 2017இல், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை ரே பரேலி, லக்னோவில் நடந்துவந்தது, ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றிணைத்து லக்னோவில் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
  • மே 21, 2017 முதல், வழக்கின் விசாரணை தினசரி நடைபெற்றது. குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் அறிக்கைகளும் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டன. கரோனா தொற்றுநோய் காரணமாக, லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட பலர் காணொலி மூலம் தங்கள் அறிக்கைகளைப் பதிவுசெய்தனர்.
  • மே 8, 2020 அன்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 31-க்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது, ஆனால் கரோனா தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு தேதி அது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர யாதவ், செப்டம்பர் 1, 2020 அன்று அனைத்து தரப்பினரின் சாட்சியங்களையும், வாதங்களையும் கேட்டு முடித்த பின்னர், செப்டம்பர் 2ஆம் தேதி தீர்ப்பை எழுதத் தொடங்கினார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 30ஆம் தேதி (இன்று) வழங்கப்படும் என்று நீதிபதி சுரேந்திர யாதவ் செப்டம்பர் 16ஆம் தேதி கூறினார்.

Last Updated : Sep 30, 2020, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.