ETV Bharat / bharat

பாபர் மசூதி வழக்கு: வழக்காடல்கள் காணொலி மூலம் நடைபெறும் என அறிவிப்பு! - video conferencing

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மேற்கொள்ளும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அடுத்த விசாரனை மே18ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பாபர் மசூதி வழக்கு, Babri Masjid case
பாபர் மசூதி வழக்கு
author img

By

Published : May 16, 2020, 4:39 PM IST

லக்னோ (உத்தர பிரதேசம்): சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் கையாளும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விசாரணை முடித்து, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முடிவதாக இருந்த விசாரணை, கரோனா நோய்க் கிருமித் தொற்று பரவலின் காரணமாக தாமதமானது.

பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு: லிபரான் அறிக்கையில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்கள்!

இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கோவிட்-19 பாதிப்புகள் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் காரணமாக தாமதம் ஏற்பட்டதால், வழக்கின் காலக்கெடுவை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான ஆர் எப் நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையில் காணொலியில் இன்று நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.