ராம்பூர்: உத்தரப் பிரதே மாநிலம் ராம்பூரில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கானின் சொகுசு விடுதியை 15 நாள்களுக்குள் இடிக்க வேண்டும் என ராம்பூர் மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த ரிசார்ட் (சொகுசு விடுதி) அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்டிருப்பது மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த இடத்தில் உள்ள நீர்நிலையும் அரசுக்கு சொந்தமானது ஆகும்.
இதையடுத்து இதனை இடிக்க மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னதாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த இந்த சொகுசு விடுதியின் சுற்றுச்சுவர் 2019ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.
தற்போது சொகுசு விடுதியையும் இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக் கூறுகையில், “நில அபகரிப்பு புகாரின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.
மேலும், “யோகி ஆட்சியில் சட்டவிரோத செயல்களுக்கு ஒருபோதும் இடம் இல்லை” என்றும் அவர் கூறினார். சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் மோசடி வழக்கில் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வார்த்தைகளால் வயிற்றை நிரப்ப முடியாது : தீம் சாங் வெளியிட்ட இந்திய இளைஞர் காங்கிரஸ்