ETV Bharat / bharat

”நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”- எம்.பி அசாம் கான் - rama devi

டெல்லி: நாடாளுமன்றத்தில் எம்.பி ரமா  தேவியை  தரக்குறைவாகப்  பேசியதற்காக  எம்.பி அசாம் கான்  அவையில் இன்று மன்னிப்புக் கேட்டார்.

ரமா தேவி-அசாம் கான்
author img

By

Published : Jul 29, 2019, 5:04 PM IST

நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா குறித்து ஜூலை 25ஆம் தேதி விவாதம் நடைபெற்றது. அப்போது, பீகார் மாநில எம்.பி ரமா தேவி தற்காலிக சபாநாயகராக இருந்தார். அந்த சமயத்தில் அவர் மசோதா குறித்த ஆணை ஒன்றை வாசித்தார். அதை எதிர்த்துப் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி அசாம் கான் ரமா தேவியை பாலியல் ரீதியான முறையில் கேலி செய்தார்.

இதனை எதிர்த்து கட்சி பேதமின்றி அனைத்து பெண் எம்.பி-களும் அசாம் கானுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். பின்னர், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அசாம் கான் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், அசாம் கானின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, அசாம் கானை ரமா தேவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் “ நான் ஒன்பது முறையாக எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளேன். சில காலம் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன். எனக்கு நாடாளுமன்ற விதிகள் குறித்து நன்றாகவே தெரியும். இருப்பினும், நான் கூறிய வார்த்தைகள் அவையில் உள்ளோரைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.