ETV Bharat / bharat

'விரைவில் பதஞ்சலியின் கரோனா மருந்துக்கு அனுமதி அளிக்கப்படும்'

author img

By

Published : Jun 24, 2020, 3:57 PM IST

டெல்லி: பதஞ்சலி நிறுவனம் தனது ஆய்வு முடிவுகளை ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் அந்த மருந்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

Shripad Naik
Shripad Naik

கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமாகிவருகிறது. கரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்தத் தொற்றுக்குச் சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை கோவிட்-19 நோயாளியை ஏழு நாள்களில் குணப்படுத்த முடியும் என்று கூறி ஒரு மருந்தை வெளியிட்டது. இந்த மருந்தை பதஞ்லி நிறுவனமும் ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், முறையான அனுமதி பெறாமல் வெளியிடப்பட்ட இந்த மருந்து குறித்த விளம்பரங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்தது. மேலும், பதஞ்சலி நிறுவனம் எந்த அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகள் அடிப்படையில் இந்த மருந்தை உருவாக்கியுள்ளனர் என்று தங்களுக்குத் தெரியாது என்றும், விரைவில் அந்த ஆய்வின் முடிவுகளைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறுகையில்,"இந்த நாட்டிற்கு ராம்தேவ் புதிய மருந்தை அளித்திருப்பது மகிழ்ச்சி. இருப்பினும், சட்டப்படி இந்த மருந்து முதலில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு வந்திருக்க வேண்டும்.

அவர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளை அனுப்பியுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். அந்த ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து, முடிவுகள் சரியாகும் இருக்கும் பட்சத்தில், விரைவில் அந்த மருந்திற்கு அனுமதியளிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து எது நம்மை பாதுகாக்கும் - சோப்புகளா? கிருமிநாசினிகளா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.