இதுதொடர்பாக தலைவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:
பிரியங்கா காந்தி
இது மகாத்மா காந்தி நாடு. அமைதி, அகிம்சை வழியில் நடப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. #AyodhyaVerdict
நிதின் கட்கரி
நீதியின் மீது நம்பிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும். #AyodhyaVerdict
யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விடுத்துள்ள அறிக்கையில், அயோத்தி தீர்ப்பை வெற்றி-தோல்வி என்று கருதக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். #AyodhyaVerdict
பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “தீர்ப்பு என்னவாக இருந்தாலும் உங்கள் எதிர்வினைகள் அமைதியானதாக இருப்பதை நாம் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். வெறுப்புணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது. மாநில காவல் துறையினரை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். #AyodhyaVerdict
சிவசேனா
சிவசேனா கட்சி சார்பில் வெளியான அறிக்கையில், "ராமர் கோயில் கட்டுவது குறித்து ஒரு சட்டத்தை உருவாக்குமாறு நாங்கள் அரசிடம் கோரியிருந்தோம். ஆனால் அரசு அதை செய்யவில்லை. தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பிக்க உள்ளது. இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AyodhyaVerdict
நவீன் பட்நாயக்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திலிருந்து விலகக் கூடாது எனக் கூறினார். #AyodhyaVerdict
இவ்வாறு தலைவர்கள் பலரும் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.