ETV Bharat / bharat

அயோத்தி, பசி மயக்கத்தில் மனிதர்களை கடிக்கும் குரங்குகள்! - பசியால் வாடும் குரங்குகள்

அயோத்தி: குரங்குகள் கூட்டமாக வந்து என் மீது துள்ளியது. நான் அப்போது மொட்டை மாடியில் துணிகளை உலர போட்டுக் கொண்டிருந்தேன். என்ன நடக்கிறது என்பதை நான் உணரும் முன், ஒரு குரங்கு என் தோளில் ஏறி கடித்தது.

effect of lockdown on wildlife  Impact of lockdown on monkeys  Monkeys are angry with hunger  அயோத்தியில் குரங்குகள் ஆக்ரோஷம்  பசியால் வாடும் குரங்குகள்  கோவிட்-19, பூட்டுதல், ஊரடங்கு உத்தரவு

author img

By

Published : Apr 11, 2020, 10:08 AM IST

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க 21 நாள்கள் பூட்டுதல் (லாக்டவுன்) அமலில் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அயோத்தி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்குள்ள குரங்குகளுக்கும் உணவளிக்க யாரும் இல்லை.

இதனால் அங்குள்ள குரங்குகள் கடும் கோபம் கொள்கின்றன. இந்தக் கோபம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 39 பேரை அவைகள் தாக்கியுள்ளன. குரங்குகள் கடித்த 39 பேரும் அயோத்தி ஸ்ரீ ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து மருத்துவர் அனில் குமார் கூறுகையில், “இது சில மணிநேரங்களில் நான் கண்ட மிக உயர்ந்த எண்ணிக்கை” என்றார். அயோத்தியில் சுமார் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் குரங்குகள் வரை உள்ளன.

இது பற்றி அப்பகுதியை சேர்ந்த ராம் லால் மிஸ்ரா என்பவர் கூறியபோது, “சாதாரண காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அயோத்திக்கு வருவதால் அவர்கள் வாழைப்பழங்கள், ரொட்டி, பூரி மற்றும் பிற உண்ணக்கூடிய பொருள்களை குரங்குகளுக்கு உணவளிப்பார்கள்.

தற்போது அவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை என கருதுகிறேன். ஏனெனில் அயோத்தியில் உள்ள குரங்குகள் ஒருபோதும் இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்ததில்லை. தற்போது இவைகள் மிகுந்த ஆக்ரோஷத்தில் காணப்படுகின்றன.

அந்தப் பகுதிகளில் நடந்து செல்வோர் மீது குரங்குகள் தாக்குதலை தொடர்கின்றன. அவர்கள் கைகளில் வைத்திருக்கும் பைகளை பிடுங்குகின்றன” என்றார்.

குரங்கு கடிக்கு ஆளான ராஜூ, “குரங்குகள் கூட்டமாக வந்து என் மீது துள்ளியது. நான் அப்போது என் மொட்டை மாடியில் துணிகளை உலர போட்டுக் கொண்டிருந்தேன்.

என்ன நடக்கிறது என்பதை நான் உணரும் முன், ஒரு குரங்கு என் தோள் மீது ஏறி கடித்தது. குரங்குகள் இப்படி நடந்துக் கொண்டதே கிடையாது” என்றார்.

நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டுதல் கடந்த மாதம் (மார்ச்) 22-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. அவர்களால் இவ்வளவு பெரிய குரங்கு கூட்டத்துக்கு உணவளிக்கவும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மலைக் குரங்குகளுக்கு உணவளித்த காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.