ETV Bharat / bharat

ராம் பெயரிட்ட 51,000 செங்கற்களை செருப்புக்கூட அணியாமல் தயாரிக்கும் அயோத்தி ஊழியர்கள்! - ராசுலாபாத் இடத்தில் செங்கற்கள் தயாரிப்பு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராம் என்று பெயர் பதித்த 51,000 செங்கற்களை, 106 ஊழியர்கள் தயாரித்து வருகின்றனர்.

Bricks for ayodhya
author img

By

Published : Nov 25, 2019, 11:45 AM IST

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட ஐந்து நீதிபதிகளும் நவம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.

அதில், அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுவதாகவும், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே, அயோத்தியில் ராமர், சீதை வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி அந்த நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது. மேலும் அங்கு ராமர் கோயில் கட்ட 3 மாதத்திற்குள் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ராம் பெயரிட்ட 51,000 செங்கற்களை செருப்பு கூட அணியாமல் தயாரிக்கும் அயோத்தி ஊழியர்கள்!

இந்நிலையில், ராமர் கோயில் கட்டுவதற்காக, பூஜை செய்யப்பட்டு செங்கற்கள் இந்தியாவின் அணைத்து பகுதிகளில் இருந்தும் அயோத்திக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. மேலும் உத்தரப் பிரதேச மாநிலம் ராசுலாபாத் என்ற இடத்தில் இருந்து 51,000 செங்கற்களை அனுப்பிவைக்க அங்குள்ள செங்கல் சூளை முதலாளி ஒருவர் முடிவெடுத்துள்ளார்.

106 ஊழியர்களை கொண்டு இந்த செங்கற்கள் தயாரிக்கப்படுவதாகவும், அயோத்திக்கு அனுப்பப்படுவதால் ஊழியர்கள் செருப்பு கூட அணியாமல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு கல்லும் மூன்று கிலோ எடையுடன், "ராம்" என்ற பெயரியிட்டு தயாரித்து வருவதாக இந்நிறுவனத்தின் மேலாளர் பாபு ராம் யாதவ் தெரிவித்துள்ளார்.

பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே அயோத்திக்கு இந்த செங்கற்கள் அனுப்பப்படவுள்ளதாக செங்கல் சூளை உரிமையாளர் சந்தீப் வர்மா தெரிவித்துள்ளார்.

இதனை டோமட் மண் என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மண்ணை கொண்டு தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அயோத்தியில் பட்டியலினத்தவருக்கு சிலை வேண்டும் - கோவா ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.