பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக முக்கியப் புள்ளிகள் உட்பட 32 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாஜக மக்களவை உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி, காந்தி யாதவ், விஜய் பதூரியா சிங், பவன் பன்தேவ், சந்தோஷ் தூபே ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூன்.5) ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அவர்கள் ஐந்து பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால், நேரமின்மையின் காரணமாக நீதிமன்றத்தால் காந்தி யாதவின் வாக்குமூலத்தை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. இதன் காரணமாக, மற்ற நான்கு பேரையும் இன்று ஆஜராகுமாறு நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், தங்களது சாதகமாக ஆதாரங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பாபர் மசூதி வழக்கு: அத்வானி உள்பட 32 பேரின் வாக்குமூலம் பெரும் சிபிஐ