1528:
பாபரின் தளபதிகளில் ஒருவரான மிர் பாக்கி, அயோத்தியில் பாபர் மஸ்ஜித்தை உருவாக்குகிறார்.
1853:
மசூதி தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பதிவு செய்யப்பட்ட முதல் வன்முறை மோதல் நடைபெறுகிறது.
1885:
பாபர் மசூதிக்கு அருகில் ஒரு கோயில் கட்ட அனுமதி கோரி மஹந்த் ரக்பீர் தாஸ் பைசாபாத் நீதிமன்றத்தை அணுகினார். மனு நிராகரிக்கப்பட்டது.
டிசம்பர் 22-23, 1949:
பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவுசெய்து, பின்னர் நகர நீதிபதி சொத்தை பறிமுதல் செய்து பூட்டுகிறார்.
1950:
கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் ராமச்சந்திர தாஸ் ஆகியோர் சிலைகளை வணங்க அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தை அணுகினர்.
1959:
சர்ச்சைக்குரிய நிலத்தை கையகப்படுத்த கோரி நிர்மோஹி அகாரா நீதிமன்றத்தை நாடியது.
பிப்ரவரி 1961:
மத்திய சன்னி வக்ஃப் வாரியம், உ.பி., சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையை அறிவிக்கவும், மசூதிக்குள் உள்ள சிலைகளை அகற்றவும் நீதிமன்றத்தை நாடியது.
பிப்ரவரி 1986:
பைசாபாத் நீதிமன்றம் பூட்டுகள் திறக்க உத்தரவிடுகிறது, இந்துக்கள் அந்த இடத்தை அணுகவும் வழிபடவும் வழி வகுக்கிறது.
1986:
பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு (BMAC) அமைக்கப்பட்டது.
அக்டோபர் 1989:
பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தலைப்பு வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்சிற்கு மாற்றப்படுகின்றன.
நவம்பர் 1989:
ராஜீவ் காந்தி அரசு விஸ்வ இந்து பரிஷத்தை (வி.எச்.பி) சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகில் பூஜை செய்ய அனுமதிக்கிறது.
செப்டம்பர் 1990:
பாஜகவின் அப்போதைய தலைவரான லால் கிருஷ்ணா அத்வானி, குஜராத்தில் உள்ள பண்டைய சோம்நாத் கோயிலில் இருந்து தொடங்கி அயோத்தி நோக்கிச் செல்லும் ஒரு ரத யாத்திரையை மேற்கொள்கிறார்.
நவம்பர் 1990:
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தியில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்கிறது மற்றும் லட்சக்கணக்கான கர சேவகர்கள் சர்ச்சைக்குரிய ஆலயத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 30 பேர் கொல்லப்பட்டனர்
டிசம்பர் 6, 1992:
கர சேவகர்கள் பாப்ரி மஸ்ஜித்தை இடிக்கிறார்கள். நீதிபதி லிபரன் ஆணையம் விசாரணைக்கு நியமிக்கப்பட்டது.
1993:
பி.வி. நரசிம்மராவ் அரசு சர்ச்சைக்குரிய இடத்தை ஒட்டியுள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துகிறது.
மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அத்வானி மற்றும் 19 பேர் மீது குற்றம் சாட்டியது.
மே 2001:
அத்வானி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் மீதான குற்றவியல் சதி குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் கைவிடுகிறது.
ஏப்ரல் 2002:
அலகாபாத் உயர்நீதிமன்றம் உரிமை கோரல் வழக்குகளை விசாரிக்கத் தொடங்குகிறது.
ஜூன் 2009:
விசாரணை அறிக்கையை லிபரன் ஆணையம் சமர்ப்பிக்கிறது. இது எல்.கே அத்வானி, எம்.எம். ஜோஷி, கல்யாண் சிங் மற்றும் உமா பாரதி உட்பட 68 பேர் மீது இடித்தாக குற்றம் சாட்டியது.
செப்டம்பர் 30, 2010:
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சர்ச்சைக்குரிய சொத்தை இருதரப்பு பகிர்வுக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.
மே 2011:
இருதரப்பும் தாக்கல் செய்த மேல் முறையீடுகள் காரணமாக உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கிறது.
ஆகஸ்ட் 2017:
இறுதி விசாரணையை டிசம்பர் 5ஆம் தேதி தொடங்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்து, 12 வாரங்களுக்குள் 9,000 பக்கங்களுக்கு மேல் உள்ள வழக்கு ஆவணங்களை மொழிபெயர்க்குமாறு உ.பி. அரசுக்கு அறிவுறுத்துகிறது.
ஜனவரி 25, 2019:
இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு பெஞ்ச் உரிமை குறித்த முறையீடுகளை மீண்டும் விசாரித்தது, ஆனால் முதலில் சமரசம் செய்ய பரிந்துரைக்கிறது.
ஆகஸ்ட் 6, 2019:
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி எஃப்.எம்.ஐ கலிஃபுல்லா தலைமையிலான சமரச குழுவால், ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், நீதிமன்றம் தினசரி விசாரணையைத் தொடங்குகிறது.
அக்டோபர் 16, 2019:
40 நாள்கள் விசாரணைக்கு பின்னர், அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
நவம்பர் 9, 2019:
நிலப்பிரச்சினையை உச்சநீதிமன்றம் முடிவுக்குக் கொண்டுவருகிறது. ஒருமித்த முடிவில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இந்து குழுக்களுக்கு இடத்தை கையகப்படுத்த வழி வகுத்தது. சன்னி வக்ஃப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: வெள்ளத்தின் மத்தியில் நற்செய்தி - இனப்பெருக்கத்தில் புலிகள்!