அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ஆம் தேதி முடிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. மேலும், அக்டோபர் 18ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுசெய்தால், விசாரணையும் நிறைவு பெறும். இதையடுத்து வரும் நவம்பர் மாதம் தீர்ப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.