ETV Bharat / bharat

அயோத்தி வழக்கு விசாரணை நிறைவு, தீர்ப்பு தள்ளிவைப்பு

author img

By

Published : Oct 16, 2019, 8:27 PM IST

டெல்லி: பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய ராம ஜென்ம பூமி என கருதப்படும் அயோத்தி வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவுப் பெற்றது.

ayodhya-case-hearing-concludes-today

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமியர் தரப்பு வாதத்தை அக்டோபர் 15ஆம் தேதி நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்துக்கள் தங்களின் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டியது பாபர் செய்த வரலாற்றுத் தவறு என்று வாதிட்டார்.

அயோத்தியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த 55 மசூதிகள் இருப்பதாகவும், ராமர் பிறப்பிடம் ஒன்றுதான் என்றும், அதை இந்துக்களால் மாற்ற முடியாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையில் இந்துக்கள் தரப்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தமது வாதங்களை நிறைவு செய்ய 45 நிமிடங்களும், இஸ்லாமியர் தரப்பு வழக்கறிஞருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று வழக்கின் விசாரணை நிறைவுப் பெற்றது. வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:

அயோத்தி 144 தடை உத்தரவின் பின்னணி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.