ETV Bharat / bharat

'உடற்பருமன் குறித்து தெரிந்து கொள்வோமா!'

உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களின் நிலைகள், அதனைக் குறைக்கும் வழிமுறைகள், திட்டங்கள் குறித்து காண்போம்.

awareness-on-obesity
awareness-on-obesity
author img

By

Published : Mar 10, 2020, 5:05 PM IST

இந்திய அரசாங்கத்தால் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான இந்திய மாநிலங்களில் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அதன்படி, உடல்பருமன் அதிகரித்துள்ள ஆண்களின் எண்ணிக்கை:

  1. கோவாவில் 15லிருந்து 32 விழுக்காடு
  2. தமிழ்நாட்டில் 14லிருந்து 28 விழுக்காடு
  3. குஜராத்தில் 11லிருந்து 20 விழுக்காடு
  4. ஹரியானாவில் 10லிருந்து 20 விழுக்காடு
  5. பிகாரில் 6லிருந்து 12 விழுக்காடு

உடல்பருமன் அதிகரித்துள்ள பெண்களின் எண்ணிக்கை:

  1. ஆந்திராவில் 17லிருந்து 33 விழுக்காடு
  2. அருணாச்சலப் பிரதேசத்தில் 8லிருந்து 18 விழுக்காடு
  3. மணிப்பூரில் 13லிருந்து 26 விழுக்காடு
  4. இமாச்சலப் பிரதேசத்தில் 13லிருந்து 28 விழுக்காடு

உடல் பருமன் நீரிழிவு நோய்க்கான முக்கியமான காரணம். அதன்விளைவு 20 வயதுக்கும் மேற்பட்ட 100 பருமனானவர்களில், நீரிழிவு நோயாளிகள் 38 பேர். தற்போதைய சூழலில் உடல் பருமன் அபாயகரமான ஒன்றாக மாறிவருகிறது. மனித உடல் நிறை குறியீடானது 25க்கும் மேலிருப்பது உடல் பருமனாகக் கருதப்பட்டு வருகிறது.

ஆனால், அதற்கு மாறாக குறியீட்டைத் தவிர்த்து, மறைமுகமான வயிற்று உடல் பருமனைக்கொண்டு, அதாவது உடலில் அதிக அளவு அடிவயிற்றைச் சுற்றியிருக்கும் கொழுப்பு (தொப்பை) கொண்ட ஒரு பெரிய மக்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது.

ஆண்களில் இடுப்பு சுற்றளவு 90 சென்டி மீட்டருக்கு அதிமாகவும், பெண்களில் 80 சென்டி மீட்டருக்கு அதிகமாகவும் இருந்தால் அது வயிற்று உடல் பருமன் எனக் கருதப்படுகிறது.

இவ்வகை உடல்பருமன் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவைகள் வர கணிசமாக வழிவகுக்கிறது. உடல் பருமனுக்காக தனிநபர்களைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அது உருவானதற்கான காரணங்களைக் கண்டறிந்து போக்குவரத்து, பொருளாதாரம், உணவு முறைகளை சரி செய்ய வேண்டும்.

எப்படிக் கட்டுபடுத்துவது:

  • ஆரோக்கியமான உணவுகள், பானங்கள், பழங்கள், காய்கறி, பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற அன்றாட வாழ்வில் கிடைக்கும் சத்துள்ளப் பொருட்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆண்டு முழுவதும் மலிவாகக் கிடைக்கும் வகையில் நிதி, உணவு, வேளாண் கொள்கைகள் உருவாக்க அரசு திட்டமிடுதல் வேண்டும்.
  • ஆரோக்கியமற்ற உணவுகள், பானங்களை குறிப்பாக குழந்தைகளுக்கு விற்பனை செய்வதில் கட்டுப்பாட்டுகள் விதிக்கவேண்டும். உடற்பருமனை குறைக்க அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி பெரும் பங்கைக்கொண்டுள்ளது. அதனால் அதனை ஊக்குவிக்க போக்குவரத்துத்துறையின் உதவியுடன் நகர், கிராமப்புறச் சாலைகளின் இருபுறமும் பசுமையான நடைபாதைகள் அமைத்து, அதன் மேல் கூரைகள் அமைக்க வேண்டும். அதனால் குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்களை சிறிய தூர வாகனப்பயணத்தைத் தவிர்த்து நடந்து செல்ல ஊக்குவிக்கும். மேலும் அங்கு அமர்வதற்கான இருக்கைகள், குடிநீருக்கான ஏற்பாடுகள் இருந்தால் கூடுதல் சிறப்பு.
  • நகர சாலைகளின் பாதைகளை ஒன்றிலிருந்து இரண்டாகப் பிரித்து, மற்றொன்றை நடைபாதையாக மாற்றினால் மக்கள் நடப்பதை அதிகரிக்கலாம். குழந்தைகள்,வயதான பாதசாரிகள் கடக்கும் இடங்களின் சிக்னல்களில் அதிக நேரம் ஒதுக்குதல் உள்ளிட்டவைகளை செய்தால் வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்தாத மக்கள், ஒவ்வொரு நாளும் 8-33 நிமிடங்களுக்கும் அதிகமாக நடக்க உட்படுத்தப்படுவர்.
  • உடற்பயிற்சி, ஆரோக்கியமான பொழுதுபோக்குகளுக்கான முயற்சிகளை அனைத்து வயதினரும் செய்வதை ஊக்கப்படுத்த நகர்ப்புற காடுகளில் பெரிய பூங்காக்கள் 0.4 ச.கி.மீ சுற்றளவில் அமைக்கப்படவேண்டும். அதில் போதுமான இடவசதி, மரங்கள், கைப்பிடிகளுடன் கூடிய பரந்த வசதியான படிக்கட்டுகள், வெளிச்சத்துடன் கூடிய பல்வேறு கண்கவர் அம்சங்கள், அமர்வதற்கான இருக்கைகள், மழையில் ஒதுங்க கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்க வேண்டும். தற்போது இருக்கக்கூடிய பூங்காக்களை இரட்டிப்பாக்கினால் நன்று.
  • நடைப்பயிற்சி, உடற்தகுதி அதுகுறித்த எண்ணங்கள் மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே சமூக ரீதியான விரும்பத்தக்க ஒன்றாக மாற்ற அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இந்தியாவின் அனைத்து நகரங்கள், கிராமங்களிலும் உள்ள கலை, கலாசார மையங்கள், நடனப் பள்ளிகள் போன்றவற்றில் உடற்பயிற்சி, ஆரோக்கியம் குறித்து ஊக்குவிக்கவேண்டும்.
  • குறிப்பாக பள்ளிகளில் பெரிய விளையாட்டு மைதானம், நடன ஆசிரியர்கள், விளையாட்டு, நடனம் ஆகியவற்றில் பங்கேற்பதற்கான ஊக்கத்தொகை திட்டங்கள். கட்டாய உடல் பயிற்சி, நடனத்திற்குத் தனி வகுப்பு - அதற்கான நேரம் ஒதுக்கப்படுதல். பணியிடங்களைப் பொறுத்தவரை அவற்றின் சூழல்களுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை நிர்வாகம் ஆதரிக்கலாம்.
  • உடற்பயிற்சி என்பது வயதுக்கு ஏற்றவாறும் வடிவமைப்பில் சுலபமானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய நோக்கத்தை உண்மையிலேயே நாம் அடைய வழிவகுக்கும்.

இதையும் படிங்க: உடல் பருமன் அதிகரிப்பு உள்ளூர் பிரச்னை அல்ல; உலக பிரச்னை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.