காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் தங்தார் செக்டரில் உள்ள சோதனை சாவடி மீது இன்று(நவ.18) காலை பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அதில் மூன்று ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக, சுதாரித்த சக வீரர்களின் முயற்சியால் அனைவரும் பனிச்சரிவிலிருந்து மீட்கப்பட்டனர்.
ஆனால், பனி குவியலுக்கு இடையே ஒரு ராணுவ வீரர் மட்டும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த இரண்டு வீரர்களையும் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.