- கடந்த ஐந்து ஆண்டுகளில், குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் வசிக்கும் ஆசிய சிங்கங்கள் 29 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் 523ஆக இருந்து நடப்பாண்டில் 674ஆக உயர்ந்துள்ளது.
- சிங்கங்கள் பரவி வாழுமிடம் 36 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் 22ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவில் இருந்த பரப்பளவு, 30 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
- தற்போது, ஆசிய சிங்கங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும், சவுராஷ்டிராவின் வேளாண் நிலப்பரப்பிலும் காணப்படுகின்றன, இது குஜராத்தில் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியது.
- கடந்த 100 ஆண்டுகளில் சிங்கங்கள் 80 விழுக்காடு வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டன.
- 27 ஆப்பிரிக்க நாடுகளிலும், ஒரு ஆசிய நாட்டிலும் சிங்கங்கள் அதிகமாக வாழ்கின்றன. ஆனால் ஒவ்வொன்றிலும் 7 நாடுகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கங்களைக் கொண்டிருக்கின்றன. 26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அழிந்துவிட்டன.
- வன விலங்குளின் வாழ்விடங்களை மனிதர்கள் அழிக்கத் தொடங்கிவிட்டன. இதனால் மனிதர்கள் வாழக்கூடிய இடத்தை நோக்கி சிங்கங்கள் வரத்தொடங்கியுள்ளன. இவை காலப்போக்கில் மனித இனத்திற்கும் விலங்குகளுக்கும் ஏற்படுகிற மோதலால் அதிகளவில் கொல்லப்படவாய்ப்புள்ளன.
- மனித வளர்ச்சியின் காரணமாக வனக்காடுகள் துண்டு துண்டானது. சிங்கங்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டு, அவை அழிந்து போகும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
- சிங்கங்களின் வாழிடம் அழிக்கப்படுவது, உணவு கிடைக்காமல் போவது, மனிதர்களினால் உண்டாகும் பிரச்னை ஆகியவையே சிங்கங்கள் எண்ணிக்கை குறைய காரணமாக உள்ளது.
- இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தில் (ஐயூசிஎன்) அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் சிங்கங்கள் தற்போது "பாதிக்கப்படக்கூடியவை" என்று பட்டியலிடப்பட்டுள்ளன.
- வரலாற்று ரீதியாக சிங்கங்கள் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா வரை காணப்படுகின்றன.
இதையும் படிங்க: சச்சின் பைலட் விவகாரத்தைத் தீர்க்க 3 பேர் கொண்ட குழு - காங்கிரஸ் அறிவிப்பு